பிரித்தானியாவின் (Britain) முதல் இந்திய வம்சாவளி பிரதமரான ரிஷி சுனக் எதிர்வரும் தேர்தலில் தோல்வியடைவார் என கருத்துக்கணிப்புக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அதன்படி, ரிஷி சுனக் (Rishi Sunak ) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி இந்த முறை பாரிய பின்னடைவை சந்திக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பொன்றில் ஜூலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் மோசமாக தோல்வியடைவார் என கணிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கு ஆதரவு
குறித்த கணக்கெடுப்பில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு 46 சதவீதமாகவும் கன்சர்வேடிவ் கட்சிக்கு நான்கு புள்ளிகள் குறைந்து 21 சதவீதமாக மட்டுமே ஆதரவு காணப்படுகிறது.
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான சவன்டா (Savanta) ஜூன் 12 முதல் ஜூன் 14 வரை இந்த கருத்து கணிப்பை மேற்கொண்டுள்ளது.
கன்சர்வேடிவ் கட்சியின் வெற்றி
இதன்படி, கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெறுவது வெகு தொலைவில் இருப்பதாக இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கிறிஸ் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 650 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 72 இடங்களை மட்டுமே பெறும் என தெரிவிக்கப்படுகிறது.