விமான விபத்துக்கள் உலகை உலுக்கி வரும் நிலையில் 180 ற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற மற்றுமொரு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி நோர்வே (Norway) ஒஸ்லோவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானமே நோர்வேயில் உள்ள டார்ப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசரமாக தரையிறக்கம்
இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டார்ப் விமான நிலையத்தில் (Torp Airport) அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Video shows KLM flight #KL1204 skidding off the runway after an emergency landing at Torp Airport. The Boeing 737-800 (PH-BXM) was en route from Oslo to Amsterdam when it experienced a hydraulic failure. Thankfully, no injuries were reported.
Video @mackjacklar#BreakingNews… https://t.co/5OE4h79YSV pic.twitter.com/JPxxkM3zuL— Antony Ochieng,KE✈️ (@Turbinetraveler) December 28, 2024
விமானத்தில் இருந்த 176 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இன்றையதினம்(29) தென்கொரியாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்திருந்தனர்.
அதேபோன்று ஏர் கனடா விமானத்திலும் கோளாறு ஏற்பட்ட நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.