Home உலகம் போரை தொடங்குங்கள் முடித்து வைக்கிறோம்: இந்தியாவிற்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை

போரை தொடங்குங்கள் முடித்து வைக்கிறோம்: இந்தியாவிற்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை

0

போர் எங்கே, எப்போது தொடங்குவது என நீங்கள் முடிவு செய்யுங்கள், இறுதி முடிவை நாங்கள் அது எங்கு முடியும் என்பதை சொல்கிறோம்’ என பாகிஸ்தான்(pakistan) இராணுவ அதிகாரி ஒருவர் இந்தியாவிற்கு(india) கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி இது தொடர்பில் கூறியிருப்பதாவது:

தக்க பதிலடி கொடுக்கப்படும்

இந்தியா ஏதாவது தாக்குதலை நடத்தினால், அதற்கு வலுவான மற்றும் நன்கு சிந்திக்கப்பட்ட பதிலடி கொடுக்கப்படும். ‘தாக்குதல் நடைபெறும் இடத்தை இந்தியா தீர்மானிக்கும், ஆனால் அது எங்கு முடியும் என்பதை நாங்கள் தீர்மானிப்போம்’.

தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி என மூன்று முனைகளிலும் பதிலடி கொடுக்க பாகிஸ்தானின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை முழுமையாக தயாராக இருக்கிறது.

இந்தியா எப்படி ஒரு சில நிமிடங்களில் முடிவு செய்தது

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா எப்படி ஒரு சில நிமிடங்களில் முடிவு செய்தது. தாக்குதல் நடந்த இடம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சுமார் 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வளவு கடினமான பாதை வழியாக யாராவது 10 நிமிடங்களில் அங்கு எப்படி அடைய முடியும்?’

தேர்தலுக்கு இலாபம் பார்க்கவே முஸ்லிம்களுக்கு எதிரான சூழலை உருவாக்க இந்திய அரசு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களைப் பயன்படுத்துகிறது. என தெரிவித்துள்ளார். 

You May like this

 

https://www.youtube.com/embed/nSKV9KGOKqg

NO COMMENTS

Exit mobile version