Home உலகம் ஈரானை அதிரவைத்த ட்ரம்பின் தாக்குதல்: பாகிஸ்தான் கடும் கண்டனம்

ஈரானை அதிரவைத்த ட்ரம்பின் தாக்குதல்: பாகிஸ்தான் கடும் கண்டனம்

0

ஈரானை (Iran) தாக்கிய அமெரிக்காவிற்கு (America) எதிராக பாகிஸ்தான் (Pakistan) கண்டனம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமாக மாறியுள்ள நிலையில், அமெரிக்கா ஈரானின் முக்கிய அணு இயக்கத்தளங்களை குண்டுவீச்சு மூலம் தாக்கியது.

இது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை கடுமையாக்கியுள்ள நிலையில், இது தொடர்பில் பாகிஸ்தான் தனது அதிகாரபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தாக்குதல்கள் 

இந்தநிலையில், குறித்த தாக்குதல்கள் அந்த நாட்டுச் சட்டங்களை மீறுவதாகவும் ஐ.நா ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கு தன்னைத் தானே பாதுகாக்கும் உரிமை இருக்கிறது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த தாக்குதல்களின் தாக்கம் மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இது மிகக் கவலைக்கிடமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் அரசு ஒரு விசித்திர நடவடிக்கையில் ட்ரம்பை 2026 அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version