Home உலகம் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால் : பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால் : பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை

0

பாகிஸ்தானின் (Pakistan) பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்தால் தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமை நாட்டிற்கு உண்டு என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் (Shahbaz Sharif) தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா (India) ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடுத்தது.

இதையடுத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், இரு நாடுகளுக்கம் இடையே நான்கு நாட்கள் இராணுவ தாக்குதல் நீடித்தது.

இராணுவ நடவடிக்கை

பின்னர், பேச்சுவார்த்தை மூலம் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர், “பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு ஆனால் அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்தால் தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமை அதற்கு உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் “சண்டை நிறுத்தத்தை இந்தியா உண்மையாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தியா விரோதப்போக்கை மீண்டும் தொடங்கினால் நாங்கள் பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version