இந்திய தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் பணியாற்றும் அந்நாட்டின் அதிகாரி ஒருவருக்கு 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரி இந்தியாவில் தனது அதிகாரபூர்வ அந்தஸ்துக்கு பொருத்தமற்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில் இந்திய அரசாங்கம் அவரை சட்டவிரோத நபராக பிரகடனப்படுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம்,வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தின் அலுவலகத்திற்கு உத்தரவு
மேலும், இன்று (மே 13) இது தொடர்பாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தின் பொறுப்பு அலுவலகத்திற்கு உத்தரவு ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
