Home உலகம் ஐ.நா. கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீன தூதர்: மனதை உலுக்கிய உரை

ஐ.நா. கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீன தூதர்: மனதை உலுக்கிய உரை

0

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பலஸ்தீனிய தூதர் ஒருவர் கதறி அழுத விடயம் தற்போது சர்வதேச மட்டத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

பலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூர் (Riyad Mansour) என்பவரே இவ்வாறு அழுதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனத்தின் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

இஸ்ரேல் அனுமதி

இதனால் அங்குள்ள மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான தகவலின்படி உணவு மற்றும் மருந்துக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், உணவு வாகனங்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும் என கோரப்பட்டது.

உணவு வாகனங்கள் செல்லாவிட்டால் பல ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடும் என தகவல் வெளியானது.

பலஸ்தீனிய தூதர் 

இந்தநிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூர், காசாவில் குண்டுவெடிப்பு, தீப்பிழம்பு, பசி, பட்டினி ஆகியவற்றின் நடுவே மக்கள் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

அப்போது மனம் உடைந்து கதறி அழுத அவர், தனக்கும் பேரக் குழந்தைகள் இருப்பதாகவும் காசா குழந்தைகளின் நிலையைப் பார்க்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காசாவின் குழந்தைகள் அண்டை நாடுகள் உள்ளிட்ட இடங்களிலும், அகதிகள் முகாமிலும் வாழ்வதைப் பார்க்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version