Home உலகம் புறப்படவிருந்த விமானத்தில் பயணி செய்த மோசமான செயல்

புறப்படவிருந்த விமானத்தில் பயணி செய்த மோசமான செயல்

0

ஸ்காட்லாந்தின் எடின்பர்க் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் அலிகாண்டே நகருக்கு செல்லவிருந்த ரியான்ஏர் (Ryanair) விமானத்தில் பயணி ஒருவர் (e-cigarette) பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமான ஊழியர்களின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி, அந்தப் பயணி இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, பாதுகாப்பு கருதி, அந்தப் பயணியை விமானத்தில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

விமான நிலைய பாதுகாப்பு

விமான ஊழியர்கள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, அந்தப் பயணி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், சக பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் வேப்பிங் செய்வது அல்லது புகைபிடிப்பது கடுமையான குற்றம். இது விமானத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். 

இந்தச் சம்பவம், விமானப் பயண விதிமுறைகளை பயணிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.

NO COMMENTS

Exit mobile version