Home உலகம் பயணிகள் கப்பல் மீது மோதிய இந்திய கடற்படை கப்பல் :பலர் பலி

பயணிகள் கப்பல் மீது மோதிய இந்திய கடற்படை கப்பல் :பலர் பலி

0

மும்பை(mumbai) கடற்பகுதியில் இந்திய(india) கடற்படை படகு ஒன்று பயணிகள் கப்பல் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கடற்படை கப்பல் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பயணிகள் கப்பலின் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு பணியில் கடற்படையினர்

விபத்துக்குள்ளான பயணிகள் கப்பலில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம்

கடற்படைக் கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version