அமெரிக்காவில் உயிரிழந்த ஒருவரின் கடைசி ஆசை காரணமாக உலங்கு வானூர்தியிலிருந்து பெருந்தொகை டொலர் நிலத்தில் கொட்டப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு கொட்டப்பட்ட இந்த டொலரை எடுப்பதற்காக மக்கள் முண்டியடித்தமையால் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மரணமடைந்தவரின் இறுதி ஆசை
அண்மையில் காலமான உள்ளூர் கார் கழுவும் நிறுவன (car wash) உரிமையாளரான தோமஸ் என்பவரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு நடைபெற்றதாக கூறப்படுகிறது,
காலமாகிய தோமஸ் என்பவர் உள்ளூர் மக்களிடம் இருந்து தான் சம்பாதித்த பணத்தை தான் இறந்த பிறகு திரும்ப அவர்களுக்கே செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் இதனையடுத்து அவர் சம்பாதித்த பணம் இவ்வாறு உலங்கு வானூர்தியிலிருந்து கொட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
