Home முக்கியச் செய்திகள் கிளிநொச்சி குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சிக்கிய கொள்ளையர்கள்

கிளிநொச்சி குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சிக்கிய கொள்ளையர்கள்

0

கிளிநொச்சி (Kilinochchi) குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பொன்றில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பானது, கிளிநொச்சி, இராமணாதபுரம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முள்ளியவலை, நெடுங்கேணி ஆகிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் 3 மோட்டார் சைக்கிள்களுடன் யாழ்ப்பாணம், ஒட்டுசுட்டான் மற்றும் திறுவையாறு ஆகிய பிரதேசங்களிருந்து கொள்ளை சம்பங்களுடன் தொடர்பு பட்ட நாங்கு பேர் கைது செய்யப்பட்டதோடு, சுமார் 28 லட்சம் பெறுமதியான நகைகள் வங்கிகள் அடைவு வைக்கும் கடைகள் போன்றவற்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி குற்றம் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களும் மீட்க்கப்பட்ட நகைகள் மற்றும் வாகனங்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version