Home உலகம் வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம்….! களத்திற்கு நேரடியாக சென்ற பிரதமர் மோடி

வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம்….! களத்திற்கு நேரடியாக சென்ற பிரதமர் மோடி

0

புதிய இணைப்பு

அஹமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

அஹமதாபாத் விமான நிலையத்துக்கு இன்று (13.06.2025) காலை சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விமான விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

முதலாம் இணைப்பு

அகமதாபாத் விமான நிலையத்திற்கு 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகிலுள்ள மேகனிநகர் என்னும் பகுதியில் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அஹமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இந்திய மதிப்பில் தலா ஒரு கோடி ரூபா நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் முழு மருத்துவச் செலவையும் டாடா குழுமமே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் விபத்தில் சேதமடைந்த பி.ஜே. கல்லூரிக்கு புதிய கட்டடமும் கட்டித் தரப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version