Home உலகம் நடுவானில் இயங்க மறுத்த இயந்திரம் :கடற்கரையில் திடீரென தரையிறங்கிய விமானம்

நடுவானில் இயங்க மறுத்த இயந்திரம் :கடற்கரையில் திடீரென தரையிறங்கிய விமானம்

0

அமெரிக்காவின் நியுயோர்க் வான் பரப்பில் பறந்த விமானம் ஒன்றின் இயந்திரம் நடுவானில் இயங்க மறுத்த நிலையில் திடீரென கடற்கரையில் தரையிறக்கப்பட்டமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் கடற்கரையில் தரையிறங்கிய நிலையில், விமானி மற்றும் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. கடற்கரையில் தரையிறங்கியதால் விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் கைதியின் சடலம் மீட்பு

விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு

விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கியதாக விமானி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வீட்டின் கிணற்றில் மிதந்த சிசுவின் சடலம் :தாய் கைது

கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது

“ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று செடார் கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது. நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது.

இதன் காரணமாக விமானத்தை இயக்கிய 60 வயது விமானி, கடற்கரையில் தரையிறக்கினார்,” என்று அமெரிக்க வான்வழி கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version