Home முக்கியச் செய்திகள் இரத்தக்காடாக மாறும் இலங்கை : இதுவரை 38 துப்பாக்கிச் சூடு – 27 படுகொலை

இரத்தக்காடாக மாறும் இலங்கை : இதுவரை 38 துப்பாக்கிச் சூடு – 27 படுகொலை

0

நாட்டில் இதுவரை நான்கு மாதங்களில் 38 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு, இலங்கையில் பாதாள உலக வன்முறைகள் கூர்மையாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெரும்பாலான சம்பவங்கள் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலிருந்து பதிவாகியுள்ளன என்றும் அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் பெருகிய மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகள் எனவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்

அத்தோடு, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு இடையே அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் போட்டியானது, பாதாள உலகக் கும்பல்களின் இலக்கு வைத்து இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாகவே வன்முறைக்கு வலிவகுத்துள்ளதாக சட்ட அமுலாக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் குற்றச் செயல் வலையமைப்புகளை அகற்றவும் மேலும் இரத்தக்களரிகளைத் தடுக்கவும் காவல்துறையினர் தரப்பு முயற்சிகளை தற்போது முடுக்கி விட்டுள்ளதாகவும் சுட்டக்காட்டப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான சமூக ஒத்துழைப்பு மற்றும் சட்டமன்ற ஆதரவையும் அதிகாரிகள் கோரியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.youtube.com/embed/5oKlONjZiQg

NO COMMENTS

Exit mobile version