Home இலங்கை அரசியல் இடப்பெயர்வின் வலி எனக்கும் தெரியும் : வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

இடப்பெயர்வின் வலி எனக்கும் தெரியும் : வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

0

இடப்பெயர்வின் வலி உங்களைப்போல எனக்கும் நன்றாகவே
தெரியும். நானும் உங்களைப்போன்று இடம்பெயர்ந்து சென்ற ஒருவன்தான் என வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மயிலிட்டியில் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்

தொடர்ந்து தெரிவிக்கையில், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் உதவி அரசாங்க அதிபராக நான்
கடமையாற்றியிருக்கின்றேன். 1996ஆம் ஆண்டு நாம் இங்கு வந்தபோது இடம்பெயராமல்
தங்கியிருந்த தையிட்டி மக்கள் சிலரை இராணுவத்தினருடன் வந்து நான்
பார்வையிட்டிருந்தேன்.

அப்போது மயிலிட்டி உள்ளிட்ட இராணுவக் கட்டுப்பாட்டுப்
பகுதிக்குள் வீடுகள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்ததை நான் நேரடியாகக்
கண்டிருந்தேன்.

2015ஆம் ஆண்டு மாவட்டச் செயலராக யாழ். மாவட்டத்துக்கு நான்
வந்த பின்னர் மயிலிட்டிப் பகுதியை வந்து பார்வையிட்டபோது அதிர்ச்சியாகவும்
கவலையாகவும் இருந்தது.

நல்ல நிலையில் இருந்த வீடுகள் பலவும் இடித்து
தரைமட்டமாக்கப்பட்டிருந்தன.

காணி விடுவிப்புக்கான கோரிக்கை

2015ஆம் ஆண்டு மாவட்டச் செயலராக நான் வரும்போது மாவிட்டபுரம் சந்தி வரையிலேயே
முழுமையாக விடுவிக்கப்பட்டிருந்தன.

அதன் பின்னர் படிப்படியாக இங்கே
மீள்குடியேற்றம் நடைபெற்றது. அன்றைய காலத்தில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக
இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா, தர்சன ஹெட்டியாராச்சி ஆகியோர்
மீள்குடியமர்வு செயற்பாட்டுக்கு முழுமையாக ஒத்துழைத்திருந்தார்கள்.

அவர்கள்
இன்னும் சில காலம் இருந்திருந்தால் மேலும் பல காணிகளை எம்மால் விடுவித்திருக்க
முடியும். 

அடிக்கடி இராணுவத்தினரைச் சந்தித்து காணி விடுவிப்புக்கான
கோரிக்கையை முன்வைத்தே இவற்றைச் சாத்தியமாக்கியிருந்தோம். 

தற்போது இங்கு வரும்போது இந்தப் பகுதிகளைப் பார்வையிடும்போது மிக்க
மகிழ்ச்சியாக இருக்கின்றது.

வீடுகளை அமைத்து கட்டடங்களை அமைத்து
முன்னேறியிருக்கின்றீர்கள். உங்கள் கிராமத்தை வளர்ச்சியடையச்
செய்திருக்கின்றீர்கள் என்றும் குறிப்பிட்டள்ளார்.

NO COMMENTS

Exit mobile version