Home உலகம் போப் பிரான்சிஸ் காலமானார்

போப் பிரான்சிஸ் காலமானார்

0

சற்று முன்னர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ் (Pope Francis) காலமானார்.

88 வயதான போப், வத்திக்கானில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் காலமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், சமீபத்தில் குணமடைந்து திரும்பியிருந்தார்.

அறிவிப்பு

அத்தோடு, உயிரிழப்பதற்கு முன்னதாக வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் நேற்று (20) நடைபெற்ற ஈஸ்டர் ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்தார்.

 இந்த நிலையில், இன்று காலை கரதினால் ஃபாரல், திருத்தந்தை பிரான்சிஸின் மறைவை துக்கத்துடன் அறிவித்தார்.

“அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனிதத் தந்தை பிரான்சிஸின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் நான் அறிவிக்க வேண்டும்.

இன்று காலை 7:35 மணிக்கு (உள்ளூர் நேரம்), ரோம் பிஷப் பிரான்சிஸ், திருத்தந்தையின் இல்லத்திற்குத் திரும்பினார்.

அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

விசுவாசம், தைரியம் மற்றும் உலகளாவிய அன்புடன், குறிப்பாக ஏழைகள் மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாழ அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார்.

கர்த்தராகிய இயேசுவின் உண்மையான சீடராக அவரது முன்மாதிரிக்கு மிகுந்த நன்றியுடன், திருத்தந்தை பிரான்சிஸின் ஆன்மாவை ஒரே மற்றும் மூவொரு கடவுளின் எல்லையற்ற இரக்கமுள்ள அன்புக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கிறோம்.”

https://www.youtube.com/embed/J6MqpK91bEA

NO COMMENTS

Exit mobile version