பாப்பரசர் பதினான்காம் லியோ(pope-leo-xivs), தனது முதல் வெளிநாடு பயணமாக லெபனான் நாட்டுக்குச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த முதல் பாப்பரசர் பதினான்காம் லியோ தனது முதல் வெளிநாட்டு பயணமாக, லெபனான் நாட்டுக்குச் செல்வார், என அந்நாட்டைச் சேர்ந்த கர்தினல் பெச்சாரா பௌட்ரஸ் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
லெபனான் நாட்டுக்கு பயணம்
“பாப்பரசர் பதினான்காம் லியோ விரைவில் லெபனான் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வார். இருப்பினும், அந்தப் பயணம் எப்போது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், வரும் டிசம்பர் மாதத்திற்குள் அவர் எப்போது வேண்டுமானாலும் தனது பயணத்தைத் துவங்கலாம். இதுகுறித்து, வாடிகன் அரசுதான் தெரிவிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என அவர் கூறியுள்ளார்.
