Home உலகம் சீனாவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

சீனாவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

0

சீனாவில் (China) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.

இந்த நிலநடுக்கமானது இன்று (16.05.2025) அதிகாலை யுனன் மாகாணம் – குன்மிங் நகரை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

இது ரிச்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.

பச்சை எச்சரிக்கை

குறித்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பச்சை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version