Home உலகம் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0

ஜப்பானில் (Japan) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கமானது மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று (8.7.2024) காலை 5.02 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (Japan Meteorological Agency) தெரிவித்துள்ளது.

உயிர் மற்றும் பொருள் சேதங்கள்

மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை (Tsunami) ஏதும் அந்நாட்டு அரசு விடுக்கவில்லை.

குறிப்பாக, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

முன்னதாக, கடந்த 4ம் திகதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் (Tokyo) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version