இந்தோனேசிய (Indonesia) கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (26.02.2025) ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது.
சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம்
வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று ஆய்வு மையம் கூறியுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை.
