Home உலகம் மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம் : எழுநூறை அண்மித்த பலி எண்ணிக்கை

மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம் : எழுநூறை அண்மித்த பலி எண்ணிக்கை

0

புதிய இணைப்பு

மியான்மரில் நேற்று ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரையில் 694 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,670 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் இணைப்பு

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 144 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.

மியான்மரின் மெண்டலே பகுதியில் 7.7 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் அதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு

தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாய்லாந்திலும் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இன்று நண்பகல் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் தற்போது வரை எவ்வித உயிரிழப்புக்களும் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை மதியம் 12:50 மணியளவில் (06:20 GMT) சகாயிங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ (10 மைல்) தொலைவில் 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

பலத்த சேதம்

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் இடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலநடுக்கத்தால் பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

https://www.youtube.com/embed/9oBMZySfd-g

NO COMMENTS

Exit mobile version