நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு தெளிவான வேலைத் திட்டங்கள் இருக்க வேண்டும் எனவும் அரசாங்கம் ஒன்றுக்குள் மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு கருத்துக்கள்
பரிமாறப்பட வேண்டுமெனவும் எதிர்கக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
களுத்துறை (Kalutara) பண்டாரகமவில் இன்று(17) இடம்பெற்ற பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு கருத்துக்கள் பரிமாறப்பட வேண்டும். இருந்தாலும் 24 மணித்தியாலமும், ஏழு நாட்களும், 365 நாட்களும், திருட்டை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள் கீழிருந்து மேல் வரை செல்கின்றது.
கொடுக்கல் வாங்கல்
ஊழலும் மோசடிகளும் திருட்டுத்தனமும் நாட்டில் காணப்படுகின்றன.
விசா புதுப்பிக்கத்தக்க சக்தி, எண்ணை கொடுக்கல் வாங்கல் ஆகிய கொடுக்கல்
வாங்கல்களின் ஊடாக திருடப்பட்ட பணத்தை அவர்களின் வயிற்றை நிரப்புகின்ற
அரசியலை செய்வதற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
இன்று பல தரப்பினர் ஒன்றிணைந்துள்ளனர், அதில் வைன் ஸ்டோர்ஸ், மதுபான
அனுமதிப்பத்திரம் போன்ற வரப்பிரசாதங்களுக்கு அவர்களை பலியெடுத்துள்ளனர்.
தான்
ஜனாதிபதியான பின்னர் அவ்வாறு மோசடியாகவும் இலஞ்சமாகவும் வழங்கப்பட்ட அனைத்து
அனுமதி பத்திரங்களையும் இரத்து செய்வேன்.
அரசியல் இலஞ்சத்துடன் தொடர்புடைய
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டிய நிலை
ஏற்படும். அவ்வாறான தவறுகளை செய்யாமல் சிந்தித்து செயல்படுமாறு வேண்டிக்
கொள்கிறேன்.
திருட்டுத்தனமான அரசியல்
எவரேனும் ஒருவர் கொள்கை திட்டத்துடனும் வழிகாட்டல்களுடனும் அரசியல் பயணங்களை
முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஐக்கிய மக்கள்
கூட்டமைப்புடனும் இணைந்து கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் பணத்துக்காகவும்
ஊழலுக்காகவும் மோசடிகளுக்காகவும் இணையவில்லை.
சிறந்த கொள்கை திட்டத்துடன்
இணைந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஊழல் மிக்க திருட்டுத்தனமான அரசியலை
நிறுத்துவதற்கான இடவேண்டும்.
தனி மனிதன் திருந்தாமல் நாட்டை திருத்த முடியாது என்று பஞயாசிக தேரர்
குறிப்பிட்டாலும், இன்று நாட்டில் ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்களும்
அவர்களின் சகாக்கள் கூட்டமும் ஒன்றாக இணைந்து கொண்டு சுகபோக வாழ்க்கையை
வளப்படுத்துவதற்காக செயல்படுகிறார்கள்.
220 இலட்சம் மக்களின் முன்னேற்றமே
ஐக்கிய மக்கள் சக்தி அபிவிருத்தி என்பதாக காண்கின்றது. அபிவிருத்தி என்று
தொகைகளை காண்பித்து பயனில்லை. அபிவிருத்தியை ஒவ்வொரு குடிமகனும் உணர
வேண்டும். அதன் பிரதி பலனை அனுபவிக்க வேண்டும்.
பொய் வாக்குறுதி
இன்று சலுகைகளையும், வரப்பிரசாதங்களையும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தில்
உள்ளவர்கள் மாத்திரமே அனுபவிக்கின்றனர். ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல்
பிரமுகர்கள் மாத்திரமே அனைத்து சுகபோகங்களை அனுபவிக்கின்றனர்.
220 இலட்சம்
மக்களும் அனாதைகளாக கைவிடப்பட்டிருக்கின்றனர். தேர்தல் காலங்களில் பொய்
வாக்குறுதிகளை வழங்கி இந்த முறையும் மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிகளை
மேற்கொண்டுள்ளனர். இதன் பின்னரும் மக்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை.
இந்த நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஐக்கிய மக்கள்
சக்தி தயார். பொருளாதார வீழ்ச்சி பொருளாதாரக் கொலைகள் ஊடாக நாட்டை
சீரழித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கும்
அபிவிருத்தியின் தளிர்களை பெற்றுத் தருவதற்கும் தாம் தயார்” என எதிர்க்கட்சித்
தலைவர் இதன் போது மேலும் குறிப்பிட்டார்.
இதன்போது, ஐக்கிய மக்கள் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உற்பட அப்பகுதியை சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/premadasa-s-vision-for-a-corruption-free-nation-1723902163
