Home இலங்கை அரசியல் சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுரவின் அழைப்பு

சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுரவின் அழைப்பு

0

நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த முதலீட்டு அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் 

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தின் மூன்றாம் நாளுடன் இணைந்ததாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சீனா டியான்யிங் இன்கோபரேசன் (CNTY- China Tianying Inc),சீன ஹார்பர் பொறியியல் நிறுவனம்( China Harbour Engineering Company Ltd) , சீன தொலைத் தொடர்பு நிர்மாண கம்பெனி லிமிடெட் (China Communications Construction Company Ltd),சீனா பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம் (China Petrochemical Corporation-SINOPEC Group), மெடலர்ஜிகல் கோபரேசன் ஒப் சைனா நிறுவனம் (Metallurgical Corporation of China Ltd), சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனம்(China Civil Engineering Construction Corporation),சீனா எனர்ஜி இன்டர்நெசனல் குழும நிறுவனம் (China Energy International Group Company Ltd),குவாங்சு பொதுப் போக்குவரத்து குழுமம்( The Guangzhou Public Transport Group) உட்பட பல முன்னணி சீன நிறுவனங்கள் இந்த முதலீட்டு அமர்வில் பங்கேற்றன.

அந்த நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதன்போது, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதர் சீ ஜென்ஹோங், சீனாவிற்கான இலங்கைத் தூதர் மஜிந்த ஜெயசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version