எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய இலங்கை (Sri Lanka) தயாராகி வரும் நிலையில், நாட்டில் அடிப்படை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறி்த்த விடயத்ததை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று (22) தெரிவித்துள்ளது.
ஆழமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டதன் பின்னர் தனது முதலாவது ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ள இலங்கை, அதன் மனித உரிமைகள் பாதுகாப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளித்த பேதிலும் அதனை இன்னும் செய்யாமல் இருக்கிறது என ஐ.நா. முகவரகம் நேற்று (22) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்புப் படை
அதற்கு பதிலாக, 2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளை இலங்கை அரச விரிவுப்படுத்தியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
மற்றும், அரசாங்கம் அதன் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும், ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுருத்தல் என்பன தொடர்பாகவும் குறித்த அறிக்கை கவனஞ்செலுத்தியுள்ளது.
குறிப்பாக, இலங்கை நாடானது ஒரு முக்கிய தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்ற நிலையில், இவ்வாறானதொரு நிலை கவலையளிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Turk) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கெதிரான சித்திரவதைகள்
தொடர்ந்து குறித்த அறிக்கை, “அரசு தன்னிச்சையாக மக்களைக் கைது செய்து காவலில் வைத்திருந்தமை, கைதிகளுக்கெதிரான சித்திரவதைகள் அதனால் ஏற்பட்ட மரணங்கள்.
தமிழீல விடுதலைப் புலிகளுக்கு எதிரான பல தசாப்த கால உள்நாட்டுப் போர் 2009 இல் முடிவடைந்ததிலிருந்து, இருந்து இலங்கை தனது 22 மில்லியன் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது ஒரு பெரிய இராணுவத்தை பராமரித்து வருகிறது” குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் மொத்த மனித உரிமை மீறல்களில் பாதுகாப்புப் படைகளின் பங்கை ஒப்புக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியியுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இ்ந்தநிலையில், உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் செய்யப்பட்ட குற்றங்கள் மற்றும் உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கக் கூடாது என்று ஐநா உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2022 இல் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி நாடு முழுவதும் பல மாதங்களாக உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்தியது.
இது பரவலான அமைதியின்மையைத் தூண்டியது.
சிக்கன நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு, பெண்கள் மற்றும் ஏழைகளை பெரிதும் பாதித்திருந்ததகாவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.