Home உலகம் இஸ்ரேல் காஸா போரில் 100ற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்

இஸ்ரேல் காஸா போரில் 100ற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்

0

காஸாவில் (Gaza) நிகழும் போரில்  பலஸ்தீன (Palestine) பத்திரிகையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஸாவில் 13 செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 50 பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு, களத்திற்குச் சென்று 4 மாதங்களாக மேற்கொண்ட விரிவான விசாரணையில் இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

’PRESS’ என்ற அடையாள அட்டை அணிந்திருந்தும் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

வெளிப்படையான தாக்குதல் 

இந்த தகவல் ஊடக உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பத்திரிகை சுதந்திரம் மீதான வெளிப்படையான தாக்குதல் இது என பத்திரிகையாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ள இஸ்ரேல் (Israel) இராணுவம், பத்திரிகையாளர்களை தாக்கவேண்டும் என்கிற முனைப்புடன் தங்கள் நாட்டு இராணுவம் செயல்படவில்லை என்றும், ஹமாஸ் (Hamas) படைகள் இருப்பிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள வான்வழித் தாக்குதல்களில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமெனவும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version