Home இலங்கை 2024 ஜனாதிபதி தேர்தல்: மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்குகளின் வீதம் வெளியானது

2024 ஜனாதிபதி தேர்தல்: மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்குகளின் வீதம் வெளியானது

0

Courtesy: Sivaa Mayuri

2024, ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று முற்பகல் 10 மணி நிலவரப்படி பெரும்பாலான மாவட்டங்களில் 20 வீதமாக பதிவாகியுள்ளதாக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கொழும்பு 20 வீதம், களுத்துறை 32 வீதம், நுவரெலியா 25 வீதம், முல்லைத்தீவு 25 வீதம், வவுனியா 30 வீதம், இரத்தினபுரி 20 வீதம், மன்னார் 29 வீதம், கம்பஹா 25 வீதம், புத்தளம் 23 வீதம், பொலன்னறுவை 35 வீதம் என்ற அளவில் வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

 

 

வாக்குகள் பதிவாகியுள்ள வீதம்

அத்துடன், குருநாகல் 30 வீதம், திகாமடுல்ல 30 வீதம், திருகோணமலை 30 வீதம், மாத்தறை 28 வீதம், கண்டி 20 வீதம் மற்றும் பதுளை 21 வீதம்.

கேகாலையில் 18 சதவீதம் என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேவேளை, மொனராகலை மற்றும் காலியில் 18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மட்டக்களப்பில் 17 வீதமும், யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக குறைந்த 10 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 

NO COMMENTS

Exit mobile version