காணாமல் ஆக்கப்பட்டடோருக்கு சர்வதேச நீதி கோரி லண்டனிலும்(london) மாபெரும்
ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30.08) லண்டனில் அமைந்துள்ள
இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம்
அங்கிருந்து டவுனிங் வீதி வரை ஊர்வலமாக சென்றடைந்தது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டம்
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில்
”யுத்தத்தின் போதும், யுத்தத்திற்கு பின்னரும் வலிந்து கைது செய்யப்பட்டு
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன..? காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில்
சர்வதேச நீதி தேவை, இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்து,
இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்” என பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை
எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் புலம் பெயர் தமிழினச் செயற்பாட்டாளர்கள், இளைஞர், யுவதிகள் எனப் பலரும்
கலந்து கொண்டனர்.
