Home இலங்கை அரசியல் யுத்த காலத்தில் கூட இவ்வாறான நெருக்கடியை கண்டிருக்கவில்லை: பிரதமர் வெளிப்படை!

யுத்த காலத்தில் கூட இவ்வாறான நெருக்கடியை கண்டிருக்கவில்லை: பிரதமர் வெளிப்படை!

0

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடியை யுத்த காலத்தில் கூடக் கண்டிருக்கவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

அந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்வந்தபோது எதிர்க்கட்சி தலைவர்கள், அதற்கு ஆதரவளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ‘இயலும் சிறிலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இயலும் சிறிலங்கா

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ஆனாலும் நெருக்கடிகளைத் தீர்த்து சுமூகமான நிலையை ஏற்படுத்தும் இயலுமையும் அனுபவமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருந்தது.

அதனாலேயே அவரிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க நாங்கள் தீர்மானித்திருந்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/puluwan-sri-lanka-camplaign-updates-tamil-1725621876

NO COMMENTS

Exit mobile version