Home உலகம் ரஷ்ய இராணுவ அதிகாரிகளுக்கு புடினின் அதிரடி உத்தரவு : வலுக்கும் போர் பதற்றம்

ரஷ்ய இராணுவ அதிகாரிகளுக்கு புடினின் அதிரடி உத்தரவு : வலுக்கும் போர் பதற்றம்

0

ஓரேஷனிக் ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரிக்க ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அந்நாட்டு இராணுவத்திற்கு அவசர உத்தரவு பிரப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தை அந்நாட்டு இராணுவ அதிகாரிகளுடன் இடம்பெற்ற ஆலோசணை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களில் ரஷ்யா உக்ரைன் மோதல் தலைகீழாக மாறிவிட்ட நிலையில் கிட்டதட்ட உலகப் போரே தொடங்கும் அளவுக்குத் தீவிரமானதாக மாறியுள்ளது.

மேற்குலக நாடுகள்

இந்தநிலையில், நீண்ட தூரம் சென்று தாக்கும் தங்கள் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு (Ukraine) மேற்குலக நாடுகள் அனுமதி அளித்துள்ளது.

இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக ரஷ்யா அதிநவீன கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்போது, ரஷ்ய ஜனாதிபதி ஹைப்பர்சோனிக் ஓரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணையின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்த தெரிவித்த அவர், “ரஷ்யா எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் நிலைமை மற்றும் தன்மையைப் பொறுத்து இந்த சோதனைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்.

ஏவுகணை உற்பத்தி

போர்க் காலங்களில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஆலோசிக்கும் வகையில் சோதனை நடத்தவுள்ளோம்.

நாம் இந்த ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் அதுவும் உடனடியாக, நேற்று சோதனை செய்யப்பட்ட ஆயுதம் என்பது ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்கிறது.

இதுபோன்ற ஏவுகணை தொழில்நுட்பத்தை உலகில் வேறு எந்த நாடும் கொண்டிருக்கவில்லை, வரும் காலத்தில் அவர்கள் இதுபோன்ற ஏவுகணைகளை உருவாக்கலாம்.

அது ஆறு மாதங்களில் நடக்கலாம் அல்லது ஓராண்டில் நடக்கலாம் ஆனால் நம்மிடம் இப்போதே இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் தங்கள் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்துள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக ரஷ்ய இந்த ஒரெஷ்னிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version