Home உலகம் பொருளாதாரத் தடை : அமெரிக்காவில் புடின் எதிர்கொண்ட சங்கடமான நிலை

பொருளாதாரத் தடை : அமெரிக்காவில் புடின் எதிர்கொண்ட சங்கடமான நிலை

0

  அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தார்.

இந்நிலையில் புடின், தனது மூன்று ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப சுமார் 2.2 கோடி ரூபாயை ரொக்கமாக செலுத்த வேண்டியிருந்தது என அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ரொக்கமாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது

பேட்டி ஒன்றில் பேசிய அவர், ரஷ்யா மீது நடைமுறையில் இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக அமெரிக்க வங்கிகளைப் பயன்படுத்த முடியாத காரணத்தினால், எரிபொருள் நிரப்புவதற்காக ரொக்கமாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது என தெரிவித்தார்.

 மேலும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ரூபியோ, ரஷ்யா ஏற்கனவே கடுமையான தடைகளின் கீழ் உள்ளது என்றும், புதிய தடைகள் உடனடியாகப் பலன் தராது என்றும் கூறினார்.

 

NO COMMENTS

Exit mobile version