Home உலகம் ட்ரம்பின் நலனுக்காக புடின் செய்த காரியம்!!

ட்ரம்பின் நலனுக்காக புடின் செய்த காரியம்!!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் (Donald Trump) அவரது சகாவான ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் (Vladimir Putin) இடையிலான தனித்துவமான நட்புறவு தொடர்பில் ட்ரம்பின் உயர்மட்ட தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த அமெரிக்க தேர்தலின் போது, பிரச்சார பேரணியில் படுகொலை முயற்சிக்கு பிறகு ட்ரம்பின் நல்வாழ்வுக்காக புடின் பிரார்த்தனையில் ஈடுபட்டதாக விட்காஃப் குறிப்பிட்டுள்ளார்.

பிரார்த்தனை 

புடினின் இந்த செயற்பாடானது, ட்ரம்ப் மீதான கவலையை வெளிப்படுத்துவதாகவும் இரு தலைவர்களுக்கும் இடையிலான நட்பை எடுத்துக்காட்டுவதாவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றில் புடினுடனான தனது இரண்டாவது சந்திப்பை விவரிக்கும் போது விட்காஃப் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதன்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுடப்பட்டபோது ரஷ்ய ஜனாதிபதி தனது உள்ளூர் தேவாலயத்திற்குச் சென்று தனது பாதிரியாரைச் சந்தித்து அவரின் மீட்புக்காக பிரார்த்தனை செய்ததாக தூதுவர் விவரித்துள்ளார்.

ட்ரம்பின் புகழாரம்

நல்லெண்ணத்தின் மற்றொரு அடையாளமாக, ஒரு உயர் ரஷ்ய கலைஞரால் ட்ரம்பிற்கு பரிசளிப்பதற்காக அழகான உருவப்படத்தை புடின் உருவாக்கியதாகவும், இது புடினுக்கும் ட்ரம்புக்கும் இடையிலான நல்லுறவை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ட்ரம்பும் புடினை ஒரு “மேதை” மற்றும் “வலிமையான தலைவர்” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் உயர்மட்ட தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்ய போர்நிறுத்தம்

இவ்வாறானதொரு பின்னணியில், உக்ரைனில் நடந்து வரும் மோதலைக் கருத்தில் கொண்டு, புடினுக்கும் ட்ரம்பிற்கும் இடையிலான நட்புறவு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடதற்காக இரு தலைவர்களும் இரண்டு மணி நேர தொலைபேசி அழைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, மோதலைத் தீர்ப்பதற்கான தற்போதைய முயற்சிகளை எடுத்துக்காட்டும் வகையில், இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக ட்ரம்ப கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version