Home சினிமா புஷ்பா 2 எப்படி இருக்கு தெரியுமா.. ராஜமௌலி சொன்ன விமர்சனம்

புஷ்பா 2 எப்படி இருக்கு தெரியுமா.. ராஜமௌலி சொன்ன விமர்சனம்

0

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது முன்பதிவிலேயே புஷ்பா 2 படம் மிகப்பெரிய அளவில் பிஸ்னஸ் செய்து இருக்கிறது. அதனால் 1000 கோடி வசூலை இந்த படம் நிச்சயம் தொடும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் புஷ்பா 2 படத்தை பெரிய அளவில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஸ்ரீலீலா ஆகியோர் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் பல இடங்களில் பிரம்மாண்டமாக நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐதராபாத்தில் புஷ்பா 2 ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்று இருக்கிறது. அதில் இயக்குனர் ராஜமௌலியும் கலந்துகொண்டார்.

புஷ்பா 2 எப்படி இருக்கு..

மேடையில் பேசிய இயக்குனர் ராஜமௌலி புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் என்ட்ரி சீன் தான் பார்ததாக கூறி இருக்கிறார்.

“புஷ்பராஜ் என்ட்ரி சீனை சுகுமார் எனக்கு காட்டினார். சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுனிடம் ஒரு விஷயத்தை மட்டும் சொன்னேன். தேவி ஸ்ரீ பிரசாத்தின் bgm போல இந்த காட்சி அற்புதமாக இருக்கிறது என சொன்னேன்.”

“முதல் காட்சியே இப்படி இருக்கிறது என்றால், மொத்த படமும் எப்படி இருக்கும் என பாருங்க” என ராஜமௌலி பேசி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version