சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.
குறித்த விஜயமானது, இன்று (22) சனிக்கிழமை மேற்கொள்ளப்பபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த நிலையில், ரணிலின் வருகை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்புக்கு விஜயம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள ரணில் புதிய மாவட்ட செயலக கட்டட தொகுதியை திறந்துவைக்கவுள்ளதுடன் இரு தினங்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.
‘எதிர்வரும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பில் தங்கியுள்ள அதிபர் ரணில் விவசாயத்தினை விரிவாக்கம் செய்தல் அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்கள் மற்றும் கள விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன் புதிய மாவட்ட செயலகத்தினையும் திறந்துவைக்கவுள்ளார்.
அதேபோன்று ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன் உறுமய காணி உறுதிப்படுத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
வேலைத்திட்டங்கள்
அத்துடன் இளைஞர் யுவதிகளையும் சந்திக்கவுள்ளதுடன் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது” என தெரிவித்தார்.
குறித்த விசேட கூட்டத்தில்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உயர் அதிகாரிகள், அதிபர் செயலக அதிகாரிகள்,பாதுகாப்பு தரப்பினர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.