Home இலங்கை அரசியல் நாளையதினம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ரணில்

நாளையதினம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ரணில்

0

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக போட்டியிடுவார் என நாளை(26) அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும், எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் இலக்குகள் தொடர்பில் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ள நாடு

இலங்கை தற்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதேநேரம் உலக நாடுகளை கையாள்வதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை அதிபர் தேர்தலில் ரணிலுக்கான ஆதரவை வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுன இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

 

Source: https://ibctamil.com/article/ranil-will-make-an-important-announcement-tomorrow-1719299627

NO COMMENTS

Exit mobile version