Home உலகம் இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம் : ஈரான் இராணுவ தளபதியின் அறிவிப்பால் பதற்றம்

இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம் : ஈரான் இராணுவ தளபதியின் அறிவிப்பால் பதற்றம்

0

 ‘இஸ்ரேல்(israel) நகரங்களை சரியான நேரத்தில் தரைமட்டம் ஆக்குவோம்’ என ஈரான்(iran) இராணுவமான புரட்சிகர படையின் தளபதி இப்ராஹிம் ஜபாரி(Ebrahim Jabbari),தெரிவித்துள்ளமை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஈரான் இராணுவமான புரட்சிகர படையின் தளபதி இப்ராஹிம் ஜபாரி ‘ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கையில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

துல்லியமாக இஸ்ரேலை அழிக்கும்

”இந்த நடவடிக்கை சரியான நேரத்தில், துல்லியமாக இஸ்ரேலை அழிக்கும் டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை தரைமட்டமாக்குவோம்,” என அவர் தெரிவித்துள்ளார்.

 இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் பதிலடி

இதற்கு பதிலடி தந்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், ”நம்மை அழிப்பதே தன் குறிக்கோள் என்று எதிரி கூறினால், -அதை நம்ப வேண்டும் என்பதை யூத மக்களாகிய நாம் வரலாற்றிலிருந்து கற்றுள்ளோம்.

நாங்கள் பதிலடி தர தயாராக உள்ளோம்,” என்றார்.

இரு நாட்டு தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள வார்த்தை போர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version