Home உலகம் அமெரிக்காவுடன் பேச்சு : கனடா பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவுடன் பேச்சு : கனடா பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

0

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில் நிருபர்களிடம் பேசியதாவது;

 கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அவற்றின் முக்கியத்துவத்தை நாங்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளை நாம் கட்டுப்படுத்த முடியாது.

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார்

 அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமாக விவாதங்களை நடத்த எங்கள் அதிகாரிகள் தயாராக உள்ளனர். அமெரிக்கா தயாராக இருக்கும் போது அந்த பேச்சுவார்த்தையை கட்டியெழுப்ப நாங்களும் தயாராக இருக்கிறோம் என்றார்.

சர்ச்சைக்குரிய விளம்பரத்தால் தடைப்பட்ட பேச்சு

இதேவேளை கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய வரிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கனடா ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்டு ரீகன் வரிவிதிப்புகள் வர்த்தக போர்களை உருவாக்கலாம் என்று பேசியதாக காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

இது ஒரு மோசடியான காணொளி என்று ரீகன் அறக்கட்டளை தெளிவுபடுத்த, கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த நிலையில் கனடா பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025

NO COMMENTS

Exit mobile version