Home இலங்கை பொருளாதாரம் மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: அதிரடியாகக் குறைக்கப்படவுள்ள உணவுப்பொருட்களின் விலை

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: அதிரடியாகக் குறைக்கப்படவுள்ள உணவுப்பொருட்களின் விலை

0

நாட்டில் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று நள்ளிரவு முதல் குறைவடையவுள்ள எரிவாயுவின் விலை

விலை குறைப்பு

இதன்படி, ஒரு கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

மரக்கறி விலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version