Home இலங்கை அரசியல் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பினால் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பினால் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

0

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்கள் அனைவரும் தமிழ்ப் பொதுவேட்பாளரான அரியநேந்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் இன்று (02.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுக் கட்டமைப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கூறுகையில்,

“எதிர்வரும் 04,05 மற்றும் 06ஆம் திகதிகளில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இதில் வாக்களிக்கவுள்ள அரச ஊழியர்கள் சங்கு சின்னத்தில் வாக்களிக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இதேவேளை, தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளது. அவர்களுக்குள்ளேயே பிளவுகள் உள்ள நிலையில், இந்த முடிவு தொடர்பில் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளனர். 

மேலும் குறிப்பிடுகையில்,

Source: https://tamilwin.com/article/request-made-to-government-employees-1725273963

NO COMMENTS

Exit mobile version