Home இலங்கை பொருளாதாரம் இலங்கை வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கை தனது வெளிநாட்டுக் கொள்கைகளை கடன் வாங்கும் கொள்கைகளில் இருந்து பிரிக்க வேண்டும் என உலக வங்கியின் முன்னாள் செயல் தலைவர் சாந்த தேவராஜன் (Shanta Devarajan) கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

“வெளிநாட்டுக் கொள்கைகளை கடன் வாங்கும் கொள்கைகளிலிருந்து பிரித்தால் அதிக கடன் செலவில் சிக்கித் தவிக்கும் அதே தவறுகள் மீண்டும் இடம்பெறாது. 

இலங்கையின் மனித உரிமைகள் பிரச்சினையில், நாட்டின் மெத்தனப் போக்கு காரணமாக அமெரிக்கா (US) மற்றும் ஜப்பான் (Japan) போன்ற நாடுகளின் சாதகமான கடன்கள்  நிராகரிக்கப்பட்டன.

அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

வணிகக் கடன்கள் 

இதற்கு பதிலாக சீனாவிடமிருந்து (China) வணிகக் கடன்களைத் தேர்ந்தெடுப்பதற்கு 2019ஆம் ஆண்டு அரசாங்கம் முடிவெடுத்தது. 

இருப்பினும், இந்த பயனற்ற செயல் நாட்டை துயரத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை பொருளாதாரக் கொள்கை நோக்கங்களுடன் கலந்துள்ளது. 

இந்நிலையில், நாடுகளுடன் உள்ள உறவுகளைப் பொருட்படுத்தாமல், மலிவான கடன் வழங்குபவரிடம் இலங்கை எப்போதும் கடன் வாங்கியுள்ளது. 

எனவே, இலங்கை தனது கடன் கொள்கையை அதன் வெளிநாட்டுக் கொள்கையில் இருந்து பிரித்து வைத்திருக்க வேண்டும். 

மேலும், பிரிவினையை உருவாக்குவது சாத்தியமற்றது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் தைவான் மற்றும் சீனாவைப் போல இது சாத்தியம். தைவானும் சீனாவும் பரம எதிரி நாடுகளாகும்.

இலங்கையின் அணு மின்சார உற்பத்தி: முதலீடுகளில் அதிக ஆர்வம் காட்டும் சீனா

நிதிப் பற்றாக்குறை

எனினும், சீனா, தைவானின் (Taiwan) மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராகவும், மிகப்பெரிய முதலீட்டு இடமாகவும் உள்ளது.

எனவே, பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில், அவர்கள் உறவை தொடர்கிறார்கள. இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டியது. 

ஏனெனில், இது அரசாங்கங்கள் நிதிப் பற்றாக்குறைகளின் போது நேரடியாக நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுப்பதைத் தடுக்கிறது. 

அதேவேளை, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் முகாமைத்துவத்தில் உத்தியோகபூர்வ கடனாளிகளிடமிருந்து தனியார் பத்திரதாரர்களுக்கு மாறுவது சிறந்த விடயமாகும்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version