Home இலங்கை அரசியல் பொருட்களின் விலை தொடர்பில் அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்

பொருட்களின் விலை தொடர்பில் அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்

0

அரிசி, தேங்காய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை (22) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ள விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க, “சந்தையில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொருட்களின் விலை

ஒரு கிலோ நாட்டு அரிசிக்கு 220 ரூபா கட்டுப்பாட்டு விலை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த செயலாளர், நாட்டு அரிசியின் விலை உயர்வினால் இந்த கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்க முடியாது என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரிசி நெருக்கடி, தேங்காய் மற்றும் முட்டை விலை உயர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படும் ” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் வருடாந்த தேங்காய் உற்பத்தி தோராயமாக மூன்று பில்லியன் என தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்களில் தேங்காய் ஒன்று சந்தையில் 130 முதல் 160 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று சில நாட்களில் முட்டை விலை 20 ரூபாவாக குறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version