Home உலகம் அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது தெரியுமா!

அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது தெரியுமா!

0

2010 முதல் 2023 வரையிலான 13 ஆண்டுகளில் அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடுகளில் மத்திய ஆசியாவை சேர்ந்த கஜகஸ்தான் (Kazakhstan) முதலிடம் பிடித்துள்ளது.

உலக பொருளாதாரம் பற்றிய பேச்சுவார்த்தைகள் வரும் போது உலக வல்லராசான அமெரிக்காவை அனைவரும் மேற்கோள்காட்டும் நிலையில், 2010 முதல் அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா (USA) முதலிடம் இல்லை.

மேற்கத்திய நாடுகள் எனப்படும் ஐரோப்பிய நாடுகளும் எதுவும் முதலிடத்தில் இல்லை.

சமீபத்திய ஆய்வறிக்கை

சமீபத்திய ஆய்வறிக்கையொன்றில் மத்திய ஆசியாவை சேர்ந்த கஜகஸ்தான் யாரும் கணிக்க முடியாத வகையில் 2010 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள குடும்பங்களுக்குச் சொந்தமான நிதிச் சொத்துக்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 13 ஆண்டுகளில் கஜகஸ்தான் நாட்டின் செல்வம் 190 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கஜகஸ்தானில் கிடைக்கும் எண்ணெய், யுரேனியம் போன்ற இயற்கை வளங்களால் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட்டியலில் முதலிடம்

மத்திய ஆசியாவில் உள்ள சிறிய நாடான கஜகஸ்தான் சமீப ஆண்டுகளில் தன்னுடைய இயற்கை வளங்களை பயன்படுத்தி கணிசமான பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தி வருகிறது.

அதற்கேற்ப பொருளாதாரக் கொள்கையையும் தளர்த்தியதால் அதன் வெற்றி தான் இந்தப் பட்டியல் என்று ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த பட்டியலில் சீனா இரண்டாமிடம் பிடித்துள்ளது.

இந்த 13 ஆண்டு காலகட்டத்தில் சீனாவின் (China) செல்வம் 185% அதிகரித்துள்ளது.

கத்தார் (Qatar) மூன்றாமிடம் பிடித்துள்ளதுடன், இஸ்ரேல் (Israel) நான்காமிடமும் இந்தியா (India) இப்பட்டியலில் 133 சதவீதத்துடன் ஐந்தாம் பிடித்துள்ளன. அமெரிக்கா இப்பட்டியலில் 8வது இடம் வகிக்கின்றது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version