நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் (Rohitha abeygunawardana) மருமகன் தனுஷ்க வீரக்கொடி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்துகம நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (01.08.2025) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சரீரப் பிணை
சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர், சந்தேக நபரை இன்று (01) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, அதே வழக்குக்காக தனுஷ்க வீரக்கொடி இன்று களுத்துறை மல்வத்த சிறைச்சாலையில் இருந்து மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது, ரோஹிதவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடியை 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
