Home உலகம் கனடாவில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

0

கனடா அரசு புதிய குடியுரிமை மசோதாவை (Bill C-3) அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மசோதா நேற்று (05) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதா, வெளிநாட்டில் பிறந்த கனடியர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் குடியுரிமையை வழங்க முடியாதது போன்ற தடைகளை நீக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குடியுரிமை 

2009 இல் நடைமுறைக்கு வந்த “first-generation limit“ காரணமாக, வெளிநாட்டில் பிறந்த கனேடியர்களின் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறந்தால் அவர்களுக்கு தானாக குடியுரிமை கிடைக்காது.

இந்தநிலையில், தற்போது குறித்த வரம்பு இனி நீக்கப்பட உள்ளதுடன் இந்த மசோதா, கடந்தகால சட்டங்களால் குடியுரிமையை இழந்தவர்களுக்கும் புதிய வாய்ப்பு அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மசோதா 

அத்தோடு, எதிர்காலத்தில் வெளிநாட்டில் பிறக்கும் பிள்ளைகளுக்கு குடியுரிமை கிடைக்க, பெற்றோரில் ஒருவருக்காவது கனடாவுடன் முக்கியமான தொடர்பில் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 டிசம்பரில், ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் “first-generation limit” அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாகத் தீர்மானித்தது.

இதனையடுத்து, தற்போது அரசு இந்த மசோதாவை கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version