Home உலகம் ஊழல் வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அமெரிக்க எம்.பி

ஊழல் வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அமெரிக்க எம்.பி

0

அமெரிக்காவின் (US) நியூயார்க் (New York) நகரில் ஆளும் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பாப் மெனண்டெஸை (Bob Menendez)  நியூயோர்க் நீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், பாப் மெனண்டெஸ்(70) மீது எகிப்து, கத்தார் நாட்டுக்கு ராணுவ உதவியை விரைவுபடுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிரடி சோதனை

அத்துடன், சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ய சில தொழிலதிபர்கள் அவரை அணுகி லஞ்சம் கொடுத்ததாகவும் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கட்டுள்ளன.

இதன் படி, இவரின் வீட்டில் அமெரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையின் போது, அவரது வீட்டில் இருந்து ஆவணமின்றி இருந்த 13 தங்கக்கட்டிகள், சொகுசு கார் மற்றும் 4 கோடி ரொக்க பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தண்டனை 

இவற்றை அடிப்படையாக கொண்டு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் லஞ்சம் கொடுத்த தொழிலதிபர்களையும் நியூயோர்க் நீதிமன்றம் குற்றவாளிகள் என உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், குற்றவாளிகளான அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு உரிய தண்டனை அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version