இன்று காலை ஈரான் (iran) இராணுவ தளங்கள் மீதான இஸ்ரேலிய (israel) வான்வழித் தாக்குதல்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாக ரஷ்யா (russia), ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக பெயரிடப்படாத ஆதாரத்தை மேற்கோள் காட்டி ஸ்கை நியூஸ் அரேபியா தெரிவித்துள்ளது.
ஈரானிய இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் உளவுத்துறை தகவல் ஈரானுக்கு வழங்கப்பட்டதாக அந்த செய்திதளம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஈரானிய வீரர்கள் பலி
இதேவேளை ஈரானிய அரச செய்தி நிறுவனமான Tasnim தகவலின் படி, இஸ்லாமிய குடியரசு மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இரண்டு ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.எனினுளும் மேலதிக தகவல் எதனையும் அது தெரிவிக்கவில்லை.
சவுதி அரேபியா கண்டனம்
இதனிடையே ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஈரான் நாட்டின் இறையாண்மையை மீறுவதாக சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு சவுதி வலியுறுத்தியுள்ளதுடன் பிராந்தியத்தில் மோதல்களை தணிக்க மற்றும் முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.