Home உலகம் உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல் : நான்கு பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல் : நான்கு பேர் பலி

0

மத்திய உக்ரைனில் (Ukraine) உள்ள டினிப்ரோ நகரில் ரஷ்ய நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த தாக்குதல் சம்பவம் இன்றைய தினம் (29.03.2025) இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு உணவகம் மற்றும் பல குடியிருப்புக்களும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இத்தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளில்லா விமான தாக்குதல் 

இது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy ) தெரிவிக்கையில், ரஷ்யா ஒரே இரவில் உக்ரைனுக்குள் 170க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஏவி, டினிப்ரோ, கீவ், சுமி, கார்கிவ் மற்றும் க்மெல்னிட்ஸ்கி பகுதிகளில் உள்ள இலக்குகளைத் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலினால் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் வரையிலும் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் தனது எரிசக்தி வசதிகளைத் தாக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் பெல்கோரோட் பிராந்தியத்தில் உள்ள மின் கட்டமைப்புகளை பலமுறை தாக்கியதாகவும், சுமார் 9,000 குடியிருப்பாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version