Home உலகம் ரஷ்யாவில் மாயமான உலங்குவானூர்தி: 17 பேரின் உடல்கள் மீட்பு!

ரஷ்யாவில் மாயமான உலங்குவானூர்தி: 17 பேரின் உடல்கள் மீட்பு!

0

ரஷ்யாவில் (Russia)  Mi-8 என்ற உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து 17 பேரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவில் கடந்த சனிக்கிழமை (31) 22 பேருடன் உலங்குவானூர்தி மாயமானதை தொடர்ந்து, 17 பேரின் உடலை மீட்பு குழுவினர் ஞாயிற்றுக்கிழமை(1) கண்டெடுத்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 19 சுற்றுலா பயணிகள் மற்றும் 3 விமான குழுவினருடன் பறந்த உலங்குவானூர்தி சிறிது நேரத்தில் காணாமல் போனதாக தெரிவித்தனர்.

17  உடல்கள் மீட்பு

இந்நிலையில், உலங்குவானூர்தியின் எச்சங்களை 900 மீட்டர் உயரமுள்ள மலை பகுதியில் மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக கம்சட்கா கவர்னர் விளாடிமிர் சோலோடோவ் சமூகவலைத்தளமொன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்ய அவசரகால அமைச்சகம் வெளியிட்ட காணொளியில், மரங்களால் சூழப்பட்ட குன்றின் அருகே உள்ள சரிவில் விமான எச்சங்கள் கிடப்பதை காண முடிகிறது.

அத்துடன் ரேடாரில் இருந்து உலங்குவானூர்தி விலகிய கடைசி இடத்திற்கு அருகிலேயே விபத்துக்குள்ளான உலங்குவானூர்தியின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இராணுவ உலங்குவானூர்தி

மீட்பு பணியாளர்கள் விபத்துக்குள்ளான பகுதியை சுற்றி முகாமிட்டுள்ள நிலையில், மீட்பு பணியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான Mi-8 உலங்குவானூர்தி சோவியத் கால இராணுவம் உலங்குவானூர்தி எனவும் இது ரஷ்யாவில் போக்குவரத்திற்காக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version