Home உலகம் உக்ரைனுக்கு உதவும் ஸ்டார்லிங்க்: செயற்கைக் கோள்களை குறிவைத்து ரஷ்யாவின் பாரிய ஆயுத திட்டம்

உக்ரைனுக்கு உதவும் ஸ்டார்லிங்க்: செயற்கைக் கோள்களை குறிவைத்து ரஷ்யாவின் பாரிய ஆயுத திட்டம்

0

 உக்ரைனுக்கு உதவுவதால் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை தாக்க ரஷ்யா புதிய ஆயுதங்களை தயாரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் தாக்​குதலில் உக்​ரைனின் தகவல் தொடர்பு கட்​டமைப்​பு​கள் சேதம் அடைந்து விட்​டன.

இதனால் போர்க்கள தகவல் தொடர்​பு​களுக்கு தொழில​திபர் எலான் மஸ்கின் ஸ்டா்ர்​லிங்க் அதிவேக இணைய சேவையை உக்​ரைன் இராணுவம் பயன்படுத்துகின்றது.

செயற்​கைகோள்

இவ்வாறு உக்​ரைன் இராணுவத்​துக்கு வர்த்தக ரீதி​யில் தகவல் தொடர்பு சேவை​கள் வழங்​கும் செயற்​கைகோள்​களை தாக்​கு​வோம் என ரஷ்ய அதி​காரி​கள் தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்து வந்​தனர்.

இதனடிப்படையில், கீழடுக்கு சுற்​று​ வட்​ட​ப் பாதை​யில் உள்ள செயற்​கைக்கோள்​கள் மீது தாக்​குல் நடத்த எஸ்​-500 ஏவு​கணை​கள் தயார் நிலை​யில் உள்​ள​தாக ரஷ்யா சமீபத்​தில் தெரிவித்திருந்தது.

விண்​ணில் செயல் இழந்த செயற்​கைக்கோள் மீது ஏவு​கணையை வீசி தகர்க்​கும் சோதனையை கடந்த 2021 ஆம் ஆண்டு ரஷ்யா செய்​தது.

இந்த​நிலை​யில் தற்போது ஸ்டார் ​லிங்க் செயற்​கைக்​ கோள்​கள் மீது தாக்​குதல் நடத்த வெடிகுண்டு தயாரிப்​பில் பயன்​படுத்​தப்படும் கூரான இரும்பு துண்​டு​களை ஆயுத​மாக பயன்​படுத்த ரஷ்யா திட்​ட​மிட்​டுள்​ள​தாக நேட்டோ உளவுப் பிரி​வினர் சந்​தேகித்துள்ளனர்.

சுற்​று​வட்​ட​ப்பாதை​

இந்த இரும்பு துண்​டு​களை சிறிய செயற்கைக் கோளில் எடுத்​துச் சென்று பூமியி​லிருந்து 550 கிலோ மீற்றர் தொலை​வில் உள்ள சுற்​று​வட்​டப்​பாதை​யில் ஆங்​காங்கே தூவப்​படும்.

இந்த கூர்​மை​யான இரும்​புத்​ துண்​டு​கள் விண்​ணில் சுற்​றிக் கொண்​டிருக்​கு் ஸ்டார்​லிங்க் செயற்கைக் கோள்​கள் மீது மோதி அவற்றை சேதப்​படுத்​தும்.

இந்த தாக்​குதலில் செயற்​கைக்​கோளின் சோலார் பேனல்​கள் எளி​தில் சேதம் அடைந்து விடும்.

இந்த ஆயுதம் அனைத்து நாடு​களின் செயற்​கைக்​கோள்​களுக்​கும் பாதிப்பை ஏற்​படுத்​தும் என்ற அடிப்படையில் கீழடுக்கு சுற்​று​வட்​ட​ப்பாதை​யில் சுற்​றிக் கொண்​டிருக்​கும் சர்​வ​தேச விண்​வெளி மையம் மற்றும் சீனா​வின் டியாங்​காங் விண்​வெளி மையம் ஆகிய​வை​யும் சேதம் அடை​யும் அபாயம் உள்​ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version