Home உலகம் உக்ரைன் அலறவிட்ட தாக்குதல் – உலக தலைவர்கள் கண்டனம்

உக்ரைன் அலறவிட்ட தாக்குதல் – உலக தலைவர்கள் கண்டனம்

0

உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா (Russia) மேற்கொண்ட தாக்கதலை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கடுமையாக கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் உலகம் பல மாதங்களாக விவாதிக்கிறது. 

ஆனால் ரஷ்யா அதற்குப் பதிலாக குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவிக்கிறது. இது ஒரு போர்க் குற்றம். ஒவ்வொரு தாக்குதலுக்கும் ரஷ்யா விலையைக் கொடுக்க வேண்டும்” எனக் கடுமையாக கண்டித்துள்ளார்.

ட்ரோன் தாக்குதல்

ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் மீது ரஷ்யா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கயா கலாஸ், “தூதரகங்கள், சர்வதேச நிறுவனங்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.

ரஷ்யா சர்வதேச சட்டங்களை மீறுகிறது” எனக் கண்டித்துள்ளார். மேலும், “இது மனிதாபிமானத்தை அழிக்கும் தாக்குதல். உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்: “போர்நிறுத்தம் தவிர வேறு வழியில்லை. நிராயுதபாணி பொதுமக்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version