Home உலகம் உக்ரைன் கட்டிடம் மீது ரஷ்யா கொடூர தாக்குதல் : 9 பேர் பலி

உக்ரைன் கட்டிடம் மீது ரஷ்யா கொடூர தாக்குதல் : 9 பேர் பலி

0

உக்ரைனின் (Ukraine) அடுக்குமாடிக் கட்டிடத்தின் மீது ரஷ்யா (Russia) நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனின் பெரிய நகரமான சுமியில் நேற்று (30.01.2025) ரஷ்யா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் குறித்த பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடமானது சேதம் அடைந்துள்ளது.

வான் பாதுகாப்பு படை

குறித்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன்,13பேர் வரை படுகாயம் காயமடைந்துள்ளனர். 

அத்தோடு உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மொத்தம் 81 தாக்குதல் ஆளில்லா விமானங்களை ஏவியதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 

உக்ரைனின் வான் பாதுகாப்பு படை அவற்றில் 37 ஐ சுட்டு வீழ்த்தியதுடன், அசவற்றில் 39 இலக்குகளை அடைவதற்கு முன்பே ரேடார்களில் இருந்து மறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

YOU MAY LIKE THIS VIDEO


https://www.youtube.com/embed/nGSPzuoPCNwhttps://www.youtube.com/embed/eFsXSXyiDCA

NO COMMENTS

Exit mobile version